×

திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் ஒன்றியம், வளையகாரனை ஊராட்சியில் ரூ.32.41 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 7 பழங்குடியினர் குடியிருப்புகளையும், எழிச்சூர் ஊராட்சி பனையூர் கிராமத்தில் ரூ.27.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 6 பழங்குடியினர் குடியிருப்புகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார், கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், எழிச்சூர் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.54.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் மற்றும் சுகாதார நிலையத்திலுள்ள உள்நோயாளிகள் பிரிவு, கட்டு கட்டும் பிரிவு, நோயாளிகளுக்கு ஊசி போடும் அறை, மருந்தகம் ஆகியவற்றை ஆய்வு செய்து, மருந்துகளின் இருப்பு நிலைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

இதனையடுத்து, வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2022-23ம் ஆண்டின் கீழ், ரூ.1.40 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பட்டுள்ள மீன் வளர்ப்பு பண்ணை குட்டையினையும் நேரில் பார்வையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

The post திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Panchayat Panchayat ,Kunradthur Union ,Kanchipuram district ,Panaiyur ,Ezhichur Panchayat ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...