×

இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் நிலங்களை அளவீடு செய்ய புதிய வசதி: கலெக்டர் தகவல்

சென்னை: நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள சென்னை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் 20.11.2023 அன்று தொடங்கி வைத்தார்.

இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை மணுதாரர் https://eservices.tn.gov.in என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் நிலங்களை அளவீடு செய்ய புதிய வசதி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Collector ,Rashmi Siddharth Jagade ,Dinakaran ,
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...