×

பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு வழங்கும் இழப்பீடு தொகை எவ்வளவு என்பதை அறிவிக்க வேண்டும்: பொடாவூர் கிராம மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு கையப்படுத்தும் நிலத்திற்கு வழங்கும் இழப்பீட்டு தொகை எவ்வளவு என்பதை அறிவிக்க வேண்டும் என பொடாவூர் கிராம மக்கள் புதிய பசுமை விமான நிலைய திட்ட மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த ஏகனாபுரம் பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4800 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மூன்று மண்டல அலுவலகங்கள் வெவ்வேறு பகுதிகளில் தொடங்கப்பட்டு இதற்கென தனி மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலில் பொடாவூர் மற்றும் சிறுவள்ளூர் கிராமத்தில் உள்ள நில உரிமையாளர்கள் பெயர் பட்டா எண் மற்றும் நில அளவு உள்ளிட்டவைகளை செய்தித்தாள்களில் அறிவிப்பாக வெளியிட்டது. இதில், பொடாவூர் கிராமத்தில் 93 ஏக்கர் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் இதற்கென உருவாக்கப்பட்ட தனி மாவட்ட வருவாய் நில எடுப்பு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் சுமார் 50 பேர் நேற்று தனி மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணனிடம் கோரிக்கை மனு ஒன்றை அனைவரும் அளித்தனர். அம்மனுவில், மேல்பொடாவூர் கிராமத்தில் உள்ள தங்களது நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தலைமுறை தலைமுறையாக விவசாய ஜீவனம் செய்து வரும்நிலையில் தனது குடும்ப வாழ்வாதாரமாக இந்த நிலம் உள்ளது.

இதற்கான நில இழப்பீடு என்ன என்பதை தெரிவித்தால் மட்டுமே மேற்கொண்டு எனது முடிவை தெரிவிக்க முடியும் என இதில் தெரிவித்து கையொப்பமிட்டு அனைவரும் அளித்துள்ளனர். இக்கிராமத்தில், அரசு நில வழிகாட்டு மதிப்பீடு வெகு குறைவாக உள்ளதால் தங்களுக்கு இழப்பீடு குறைவாக கிடைக்கும் என்பதால் இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் இடுகாடும் நில கையகப்படுத்த உள்ளதால் அதற்கான நிலத்தை முதலில் அளிக்க வேண்டும் கோரிக்கை வைக்கின்றனர்.

The post பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு வழங்கும் இழப்பீடு தொகை எவ்வளவு என்பதை அறிவிக்க வேண்டும்: பொடாவூர் கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Parandur airport ,Podavoor ,Kanchipuram ,Podavoor Village ,District ,Revenue ,Officer ,New Green Airport Project ,Paranthur Airport ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...