×

குதிரைவாலி கேரட் அடை

தேவையானவை

குதிரைவாலி அரிசி – 1 கப்
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப்
கேரட் துருவல் -1 கப்
சிகப்பு மிளகாய் – 5
பெருங்காயம், நறுக்கிய வெங்காயம் – கால் கப்
கறிவேப்பிலை, முருங்கை இலை – கால் கப்
உப்பு – தேவைக்கேற்ப
சோம்புத்தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

அரிசி. பருப்புகளை கழுவிவிட்டு 2 மணி நேரம் ஊறவிடவும். சிகப்பு மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர் மாவில் மற்ற பொருட்களை சேர்த்து தேவையெனில் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து சூடான கலனில் எண்ணெய்விட்டு பின்னர் மாவை அடைகளாக ஊற்றி இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும். புரோட்டீன் நிறைந்த, சத்துக்கள் நிறைந்த இந்த அடை பிள்ளைகளுக்கு கொடுக்க, ருசியாக இருக்கும்.

 

The post குதிரைவாலி கேரட் அடை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...