- பெண்கள் பிரிமியர் லீக் தொடர்
- பெங்களூரு
- மும்பை
- புது தில்லி
- 2வது பெண்கள் பிரிமியர் லீக் தொடர்
- தில்லி தலைநகரம்
- மும்பை இந்தியர்கள்
- அரச
- சவால்கள்
- தின மலர்
புதுடெல்லி: 5 அணிகள் பங்கேற்றுள்ள 2வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடித்த டெல்லி கேபிட்டல்ஸ் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் 2வது இடமும், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3வது இடமும் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்தன. உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் முறையே 4 மற்றும் 5வது இடத்தை பிடித்து வெளியேறின.
இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதற்கு முன் மோதிய 4 போட்டியில் 3ல் மும்பை, ஒன்றில் பெங்களூரு வென்றுள்ளது. நடப்பு சீசனில் மோதிய போட்டியில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இன்று வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் பைனலில் டெல்லியுடன் மோதும்.
The post மகளிர் பிரீமியர் லீக் தொடர்: எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு-மும்பை இன்று மோதல் appeared first on Dinakaran.