×

போதைப் பொருள் கடத்தல் விவகாரம்.. ஜாபர் சாதிக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: மலேசியாவைச் சேர்ந்த டத்தோ மாலிக் விளக்கம்!!

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மலேசியாவைச் சேர்ந்த டத்தோ மாலிக் விளக்கம் அளித்துள்ளார். தற்போதைய நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பேசுபொருளாக இருப்பது, போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த முக்கியப் புள்ளி ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைதுசெய்திருப்பதுதான். கைது செய்ததுடன் ஜாபரிடம் என்.சி.பி அதிகாரிகள் வாக்குமூலமும் பெற்றிருக்கின்றனர். அதோடு, இன்னும் இந்தக் கும்பலோடு தொடர்புடையவர்களை தேடிக்கொண்டிருக்கிறது என்.சி.பி.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மலேசியாவைச் சேர்ந்த டத்தோ மாலிக் விளக்கம் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் மாலிக், மலேசியாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் தொடர்புடைய கடத்தல் கும்பலின் தலைவர் மலேசியாவை சேர்ந்தவர் என்று டத்தோ மாலிக் பெயரை குறிப்பிட்டு தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள டத்தோ மாலிக் ஜாபர் சாதிக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், ஜாபர் சாதிக்கை தாம் நேரில் பார்த்ததுகூட இல்லை என்றும் கூறியுள்ளார்.

The post போதைப் பொருள் கடத்தல் விவகாரம்.. ஜாபர் சாதிக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: மலேசியாவைச் சேர்ந்த டத்தோ மாலிக் விளக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Datuk Malik ,Malaysia ,Chennai ,Zafar Sadiq ,India ,Dinakaran ,
× RELATED மலேசியாவில் சிலம்பாட்டம் பரமக்குடி மாணவர்கள் பதக்கங்கள் வென்றனர்