×

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிஸ்சார்ஜ்: மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் எனத் தகவல்

கொல்கத்தா: நெற்றி காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வீடு திரும்பினார். 69 வயதான மம்தா பானர்ஜிக்கு கொல்கத்தா காளிகாட் வீட்டில் இருந்தபோது கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. நெற்றியின் நடுவில் ஆழமான வெட்டு மற்றும் முகத்தில் இரத்தத்துடன், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் பெற்று வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய போதும் மம்தா பானர்ஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து உள்ளனர்.

 

The post மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிஸ்சார்ஜ்: மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் எனத் தகவல் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Mamata Banerjee ,Kolkata ,West ,Bengal ,Chief Minister ,Mamta Banerjee ,Kolkata Caligat ,
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்