×

5 மாதத்தில் 3660 வழக்குகள் பதிவு விடுமுறை நாட்களில் பணிக்கு அழைப்பதே கைவிட வேண்டும்

 

தஞ்சாவூர், மார்ச் 15: விடுமுறை நாட்களில் பணிக்கு அழைப்பதே கைவிட கோரி தஞ்சை தபால் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுமுறை நாட்களில் ஊழியர்களை பணிக்கு அழைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை தபால் நிலையம் முன்பு தபால் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய மண்டல செயலாளர் வெங்கடாஜலபதி தலைமை வகித்தார். கோட்டைச் செயலாளர்கள் ராஜ்குமார், செந்தில்குமார், கிளை செயலாளர் பாஸ்கரன், செயலாளர் கருப்புசாமி, கிளைச் செயலாளர் மோகன்தாஸ் ன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் டார்கெட் என்ற பெயரில் ஊழியர்களை துன்புறுத்துவதையும் பழிவாங்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். தனிநபர் இலக்கு நிர்ணயம் தருவதை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு விதிகளுக்கு மாறாக ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஊழியர்களை பணிக்கு அழைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். சாத்தியமில்லாத இலக்கை அடையாவிட்டால் மருத்துவ விடுப்பு மறுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் கூட்டமைப்பு தலைவர் குணசேகரன், மாநில தலைவர் முனியக்குமார், கோட்ட பொறியாளர்கள் பிலவேந்திரன், பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post 5 மாதத்தில் 3660 வழக்குகள் பதிவு விடுமுறை நாட்களில் பணிக்கு அழைப்பதே கைவிட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur postal ,Tanjore Post ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...