×

வத்திராயிருப்பில் சாலையோரம் கிடக்கும் பழங்கால சிலைகள் ஆய்வு செய்ய மக்கள் கோரிக்கை

 

வத்திராயிருப்பு, மார்ச் 15: வத்திராயிருப்பில் சாலையோரம் கிடக்கும் பழங்கால சிலைகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வத்திராயிருப்பில் இருந்து அர்ச்சுனாபுரம் செல்லும் சாலையில் வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அமைந்துள்ளது. இதன் அருகே சாலையோரத்தில் பழங்கால கல் சிலைகள் பல ஆண்டுகளாக கிடக்கிறது.

இந்த கல்சிலையில் உடைந்த நிலையில் அம்மன் அமர்ந்தவாறு ஒரு சிலையும், விநாயகர் மற்றும் சிவன் உருவங்கள் பொறிக்கப்பட்ட கல் சிலையும், நாகப்பாம்பு வடிவிலான சிலைகள் மற்றும் விளக்கு ஏற்றுவதற்கு விளக்கு கல் உள்ளிட்ட சிறு சிறு சிலைகளாக காணப்படுகின்றன. இந்த சிலைகளின் தோற்றத்தை வைத்து பார்க்கும் பொழுது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த சிலைகளை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post வத்திராயிருப்பில் சாலையோரம் கிடக்கும் பழங்கால சிலைகள் ஆய்வு செய்ய மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vathirayiru ,Archunapuram ,
× RELATED விருதுநகர் மாவட்டம்...