×

மதுரை அரசு மருத்துவமனையில் அதிநவீன முறையில் செயற்கை அவயங்கள் பொருத்தும் வசதி

மதுரை, மார்ச் 15: மதுரை அரசு மருத்துவமனையில், அதிநவீன முறையில் செயற்கை அவயங்கள் பொருத்தும் வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் பொருத்தும் நவீன வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையின் இயல்பியல் மற்றும் புனர்வாழ்வு மருத்துவத்துறையின் கீழ் உயர்தொழில் நுட்பம் மூலம் செயற்கை அவயங்கள் பொருத்தப்படுகிறது. இதுவரை சுமார் 10 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளனர். இதில் இடது முழங்காலுக்கு மேல் காலை இழந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கிரேடு 3 எனும் உயர் தொழில்நுட்பம் மூலம் உலகத்தரத்திலான அதிநவீன செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனை டிசிசி பிளாக்கில் பயனாளிகளுக்கு எடைகுறைவான நவீன செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 15) நடக்கிறது.

The post மதுரை அரசு மருத்துவமனையில் அதிநவீன முறையில் செயற்கை அவயங்கள் பொருத்தும் வசதி appeared first on Dinakaran.

Tags : Madurai Government Hospital ,Madurai ,Government Medical College Hospitals ,Tamil Nadu ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...