×

நெற்றியில் பெரிய வெட்டு மேற்குவங்க முதல்வர் மம்தா படுகாயம்

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சில படங்களை வெளியிட்டது. அதில் முதல்வர் மம்தாவின் நெற்றியில் பெரிய வெட்டுக்காயம் இருந்தது. ரத்தம் முகத்தில் வழிந்தபடி இருந்தது. கட்சியின் எக்ஸ் பக்கத்தில், ’எங்கள் தலைவர் மம்தா பானர்ஜிக்கு பெரும் காயம் ஏற்பட்டது.

தயவுசெய்து அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் நெற்றியின் நடுவில் ஆழமான வெட்டு மற்றும் முகத்தில் இரத்தத்துடன், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் அதில் இடம் பெற்று இருந்தன. முதல்வர் மம்தாவுக்கு வீட்டில் காயம் ஏற்பட்டதாகவும், அவர் கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் திரிணாமுல் வட்டாரங்கள் தெரிவித்தன.

The post நெற்றியில் பெரிய வெட்டு மேற்குவங்க முதல்வர் மம்தா படுகாயம் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Chief Minister ,Mamata Padukayam ,Kolkata ,Trinamool Congress ,Mamata Banerjee ,Mamata ,
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி