- முட்டாள்தனமான
- ஏ-மண்டல கல்லூரிகள்
- சென்னை பல்கலைக்கழகம்
- சேத்பட், சென்னை
- MOB வைஷ்ணவி கல்லூரி
- ராணி மேரி அரசு கல்லூரி
- வேடிக்கையான புள்ளி
- தின மலர்
* சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஏ-மண்டல கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி சென்னை சேத்பட்டில் நடந்தது. அதில் 10 தங்கம், 7வெள்ளி, 3 வெண்கலம் வென்ற எம்ஓபி வைணவக் கல்லூரி முதல் இடத்தை பிடித்தது. ராணி மேரி அரசுக் கல்லூரி 2வது இடத்தையும், எஸ்டிஎன்பி வைணவக் கல்லூரி 3வது இடத்தையும் பிடித்தன.
* சென்னை ராயப்பேட்டையில் உள்ள சந்தை மாளிகையில் நேற்று நகைக் கடையை கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ(வெஸ்ட் இண்டீஸ்) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சிஎஸ்கே பணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நாங்கள் வைத்திருக்கும் திட்டங்களை பயிற்சியின் போது பரிசீலித்து பார்ப்போம். சென்னை என்றில்லை எங்கு விளையாடினாலும் சிறந்த வீரர் தனது திறமையை வெளிப்படுத்துவதுதான் முக்கியம். அந்த வகையில் சென்னை எப்போதும் ஆயுத்தமாக இருக்கிறது. நிர்வாகிகளின் நெருக்கடி இல்லாமல் வீரர்கள் விளையாட வாய்ப்பு கிடைப்பது அணியின் சிறப்பு’ என்றார்.
* அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெறும் பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டியன் காலிறுதியில் விளையாட பெண்கள் பிரிவில் விளையாட கோகோ காஃப், எம்பா நவர்ரோ(அமெரிக்கா), மரியா சாக்கரி(கிரீஸ்), யுயே யுயான்(சீனா) ஆகியோர் நேற்று தகுதிப் பெற்றனர். ஆடவர் பிரிவு 3வது சுற்றில் நெம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்திய இத்தாலி வீரர் லுகா நார்டி 4வது சுற்றில் அமெரிக்க வீரர் டம்மி பாலிடம் வீழ்ந்தார்.
* இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் லஹிரு திரிமன்னே நேற்று கார் விபத்தில் சிக்கினார். பலத்த காயமடைந்துள்ள அவர், அனுராதபுரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
* லண்டனில் நடைபெறும் ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் ேபாட்டியின் பெண்கள் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து தோற்று வெளியேறினார்.
The post சில்லிபாயின்ட்.. appeared first on Dinakaran.