×

பிரதீபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி

புனே: முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக புனேயில் உள்ள பாரதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. பிரதீபா பாட்டீல், முதல் பெண் ஜனாதிபதியாக, 2007 முதல் 2012ம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

The post பிரதீபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Pradeepa Patil Hospital ,Pune ,Former ,President ,Pradeepa Patil ,Bharati Hospital ,Dinakaran ,
× RELATED புனே அருகே முன்விரோதத்தால் ஆவேசமாக...