- மதுரை விமான நிலையம்
- தேசிய அனர்த்த நிவாரணப் படை
- திருப்பரங்குன்றம்
- என்.டி.ஆர்.எஃப்
- மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை மைதானம்
- தேசிய பேரழிவு மீட்பு படை
- தின மலர்
திருப்பரங்குன்றம்: மதுரை விமான நிலையத்தில், அணுக்கதிர் வீச்சு மற்று ரசாயன பொருட்கள் நச்சு அபாயத்திலிருந்து பயணிகளை மீட்டு முதலுதவி அளிப்பது குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை ஒத்திகையில் ஈடுபட்டது. மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பில் பேரிடர் காலங்களில் பயணிகளை மீட்டு, சிகிச்சை அளிப்பது குறித்து ஒத்திகை நடத்தினர். அப்போது, அணுக்கதிர்வீச்சு, ரசாயன நச்சுக்கள் வெளியேறும் பேரிடர் காலங்களில் விமான நிலைய பணியாளர்கள், பொதுமக்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தல் குறித்து விளக்கம் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை அரக்கோணம் துணை கமாண்டன்ட் சங்கேத் தலைமை வகித்தார். தேசிய பேரிடர் மேலாண்மை துறை ஆணைய ஆலோசகர்கள் ரஜினேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் முதலுதவி மையத்தை சேர்ந்த 45 பேர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இதில் விமான நிலைய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் அதிகாரி விஸ்வநாதன் மற்றும் விமான நிலைய முதுநிலை மேலாளர் ஹரிசங்கர், விமான நிலைய தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மதுரை விமான நிலையத்தில் பேரிடர் காலங்களில் பயணிகளை மீட்பது எப்படி: தேசிய பேரிடர் மீட்பு படை விளக்கம் appeared first on Dinakaran.