×

திமுக அரசு கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

தண்டையார்பேட்டை: திமுக அரசு கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என துறைமுகம் தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியுள்ளார். சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தியால்பேட்டை இப்ராஹிம் தெருவில் உருது நடுநலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ரூ.96,17 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. இதுபோல் அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள உருது நடுநிலைப்பள்ளியில் ரூ.2 கோடியே 8 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 56வது வட்டம் பிராட்வே பிஆர்என் கார்டன் பகுதியில் ரூ.2 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார மைய திறப்பு விழா மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 55வது வட்டம் அப்புமேஸ்திரி தெருவில் ஒரு கோடியே 47 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா இன்று நடந்தது.

விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு, புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும் அடிக்கல்நாட்டியும் பணிகளை துவக்கிவைத்தனர். அப்போது நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், ”வெயிலின் தாக்கத்தால் பக்தர்களின் நலன் கருதி கருங்கல் பதித்த தரையோடு இருக்கக்கூடிய கோயில்களில் கையிர் மேட் ஏற்படுத்தப்படும். இதுபோல் பெருமளவு பக்தர்கள் வரும் கோயில்களில் நீர்மோர் தர உள்ளோம். முதற்கட்டமாக 48 முதல் நிலை கோயில்களில் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் தரப்பட இருக்கிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இத்திட்டத்தை துவக்கி வைக்க இருக்கிறோம். முதல்வர் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர் என்பதால்தான் வெயிலின் தாக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். சோளிங்கரில் துவக்கி வைக்கப்பட்டிருக்கக்கூடிய ரோப் கார் திட்டத்தால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து முதல்வரை பாராட்டுகிறார்கள். திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சியில் வாழ்க முதல்வர் என்ற கோஷத்தை கேட்க முடிகிறது. மத்திய சென்னையை பொறுத்தவரை தேர்தெடுக்கப் படும் வேட்பாளரை வெற்றிபெற செய்வோம்.

2019ம் ஆண்டில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரான பின் தயாநிதி மாறன் கால்படாத இடமே மத்திய சென்னையில் இல்லை” என்றார். இதைத்தொடர்ந்து மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் கூறுகையில், \\”இன்று மட்டும் ரூபாய் ஆறரை கோடி அளவிற்கான திட்டத்தை துவக்கி வைத்து இருக்கிறோம். கல்விக்கும், மருத்துவத்துறைக்கும் திராவிட மாடல் அரசு அதிக முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. பள்ளிக்கூட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த அதிமுகவிடம் இருந்து மீட்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார். நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, பகுதி செயலாளர் ராஜசேகர், முரளி, மண்டலக்குழு தலைவர் ராமுலு, கவுன்சிலர்கள், வழக்கறிஞர் பரிமளம், இசட் ஆசாத், வட்ட செயலாளர் கவியரசு, கதிரவன் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post திமுக அரசு கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது: தயாநிதி மாறன் எம்பி பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK government ,Dayanidhi Maran ,Thandaiyarpet ,Central Chennai Parliament ,Harbaram ,Muthialpet ,Ibrahim Street ,Chennai Harbor ,Dinakaran ,
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...