×

இணைய வழி பயணசீட்டை ரத்து செய்தால், ஒரு மணி நேரத்தில் பணம் திரும்பக் கிடைக்க ஏற்பாடு: இந்திய ரயில்வேயின் புதிய திட்டம்

டெல்லி: இந்திய ரயில்வே துறை பயணிகளின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஐஆர்சிடிசி இணையதளம் வழியாக முன்பதிவு செய்த பயணசீட்டை ரத்து செய்தால், அதற்குரிய தொகையை உடனடியாக திரும்ப வழங்க இந்திய ரயில்வே ஏற்பாடு செய்து வறுகிறது.

ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக ரயில்வே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது டிக்கெட் கிடைக்காவிட்டாலும் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும். அந்தப் பணத்தை திரும்ப பெற 2 நாட்கள் வரையில் காத்திருக்க வேண்டும். இதுமட்டுமின்றி, முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்தாலும், அந்த பணத்தை பெறவும் தாமதமாகும்.

இனி பயணிகள் ஒரு மணி நேரத்தில் தங்கள் டிக்கெட்டிற்கான பணத்னத திரும்ப பெற முடியும். ஐஆர்சிடிசி மற்றும் ரயில்வே தகவல் அமைப்பு மையம் இணைந்து இந்த முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளன. இந்த செய்தி ஐஆர்சிடிசி மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்து வரும் பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

The post இணைய வழி பயணசீட்டை ரத்து செய்தால், ஒரு மணி நேரத்தில் பணம் திரும்பக் கிடைக்க ஏற்பாடு: இந்திய ரயில்வேயின் புதிய திட்டம் appeared first on Dinakaran.

Tags : Indian Railways ,Delhi ,IRCTC ,Dinakaran ,
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்