×

ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியின் எஸ்.டி. கொரியர் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை

சென்னை: சென்னை பல்லாவரத்தில் இருக்க கூடிய எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எஸ்.டி. கொரியர் நிறுவனமானது ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனிக்கு சொந்தமானது. தற்போது ராமநாதபுரத்தில் மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராகவும் நவாஸ் கனி அறிவிக்கபட்டுள்ளார்.

சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. அதேபோல் பல்லாவரத்தில் மற்றொறு ஹோட்டல் உரிமையாளர் ரியாஸ் என்பவரது அலுவலகத்திலும் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியின் எஸ்.டி. கொரியர் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,M. B. S. ,Nawaz Gani D. ,Chennai ,Chennai Pallavaram ,D. Enforcement ,Korean ,M. B. Nawaz ,Kani ,Union of India ,Office ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை...