- இராணுவ
- கரூர் இரயில் நிலையம்
- கரூர்
- பிச்சைமுத்து பாஸ்கர்
- பெரியகுளத்துப்பட்டி
- மாரம்பாடி
- திண்டுக்கல் மாவட்டம்
- இராணுவ மருத்துவ துறை
- மீரட்
- தின மலர்
கரூர், மார்ச் 14: கரூர் ரயில்நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற ராணுவவீரர் தவறி விழுந்து பலியானார்.திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி அருகேயுள்ள பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து பாஸ்கர் (32). இவர் ராணுவ மருத்துவப் பிரிவில் மீரட்டில் பணியாற்றி வந்தார். திருமணமாகி, குழந்தை உள்ளது. ஒரு மாத விடுப்பில் சண்டிகர்- மதுரை விரைவு ரயிலில் நேற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.கரூர் ரயில் நிலைய சந்திப்பில் ரயில் காலை 11.35 மணிக்கு நின்றது. இந்நிலையில் திண்டுக்கல் ரயில் நிலையம் என நினைத்து பாஸ்கர் ரயிலில் இருந்து தவறுதலாக கீழே இறங்கியுள்ளார். கரூர் என்று தெரிந்ததும் மீண்டும் ரயிலில் ஏற முயன்றுள்ளார். அதற்குள் ரயில் புறப்பட்டு விடவே தவறி தண்டவாளத்தில் விழுந்தவர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து கரூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கரூர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும் போது தவறி விழுந்து ராணுவ வீரர் பலி appeared first on Dinakaran.