×

ரூ.25 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

 

வெள்ளகோவில், மார்ச் 14: வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதற்காக வெள்ளகோவில், தாராபுரம், பழனி, லாலாபேட்டை, திருச்சி, கரூர், காங்கயம், பகுதி விவசாயிகள் 74 பேர், 710 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில், முத்தூர், காங்கயம், ஊத்துக்குளி ஆர்எஸ், ஈரோடு,நஞ்சை ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் 12 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தரமான முதல் தர பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.85.75க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.56க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் 34 ஆயிரம் கிலோ கொப்பரைகள் ரூ.25 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.

The post ரூ.25 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Koper ,Velako ,Order Method Sales Hall ,Vilagoo ,Tharapuram ,Palani ,Lalapete ,Trichy ,Karur ,Kangayam ,Dinakaran ,
× RELATED 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் – 2 பேர் கைது