×

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.12ல் கொடியேற்றத்துடன் துவக்கம்: ஏப். 21ம் தேதி திருக்கல்யாணம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப். 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா, ஏப். 12ம் தேதி காலை 9.55 மணிக்கு மேல் 10.19க்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கோயில் பட்டர்கள் கொடியேற்றி திருவிழாவை துவக்கி வைக்கின்றனர். பின்னர் கொடி மரத்திற்கு பூ மாலை சூட்டி, மலர்கள் தூவி சிறப்பு தீபாராதனை நடைபெறும். விழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு சுவாமி சுந்தரேஸ்வரர் சிம்ம வாகனத்திலும், மீனாட்சியம்மன் கற்பக விருட்சக வாகனத்திலும் மாசி வீதிகளில் உலா வருகின்றனர்.

தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் உலா வருகின்றனர்.ஏப். 19ம் தேதி இரவு 7.35 மணிக்கு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப். 20ம் தேதி, திக்கு விஜயம், ஏப். 21ம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப். 22ம் தேதி காலை 6.30 மணிக்கு மாசி வீதிகளில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப். 23ம் தேதி கோயில் தெப்பத்தில் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து அழகர்கோவில் திருவிழா தொடங்குகிறது.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.12ல் கொடியேற்றத்துடன் துவக்கம்: ஏப். 21ம் தேதி திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshiyamman Temple Chitrai Festival ,Tirukalyanam ,Madurai: ,Chitrai Festival ,Madurai Meenakshiyamman Temple ,Meenakshiyamman Temple ,Madurai ,Thirukalyanam ,
× RELATED உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி –...