×

செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை

சென்னை: சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் அளித்த பேட்டி: எம்ஆர்பி தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்துக்காக காத்திருந்த செவிலியர்கள் கடந்த ஆட்சி காலத்தில், கொரோனா காலக் கட்டத்தில், தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில் , 864 எம். ஆர். பி கோவிட் செவிலியர்களுக்கு ,தமிழ்நாடு அரசு மீண்டும் பணி வழங்கியது வரவேற்பிற்கும் பாராட்டிற்கும் உரியது.

தமிழ்நாடு அரசின் இந்நடவடிக்கையைப் பாராட்டி எம்.ஆர்.பி கோவிட் செவிலியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.விஜயலட்சுமி தலைமையில் நன்றி பாராட்டும் விழா, இன்று மாலை சென்னை சைதாப்பேட்டையில் நடக்கிறது. அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் , துணைச் செயலாளர் வீரபாண்டியன் மற்றும் 600க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொள்கின்றனர். பணியில் இருக்கும் செவிலியர்கள், செவிலிய மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க முடியாத நிலை தொடர்கிறது. எனவே, அவர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில், தபால் வாக்கு வழங்கிட, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : General Secretary ,Ravindranath ,Chennai ,Association of Doctors for Social Equality Dr. G. ,R. ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்