×
Saravana Stores

பாரிபா ஓபன் டென்னிஸ் காலிறுயில் ஸ்வியாடெக்

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடக்கும் பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். 4வது சுற்றில் கஜகஸ்தானின் யுலியா புதின்சேவாவுடன் (29வயது, 79வது ரேங்க்) மோதிய ஸ்வியாடெக் (22வயது, போலந்து) 6-1, 6-2 என நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 11 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 4வது சுற்றில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி (33வயது, 204வது ரேங்க்) 6-4, 6-2 என நேர் செட்களில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை (36வயது, 607வது ரேங்க்) வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 29 நிமிடங்களுக்கு நீடித்தது. மார்தா கோஸ்டியுக் (உக்ரைன்), அனஸ்டேசியா போடபோவா (ரஷ்யா) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். இதே தொடரின் ஒற்றையர் பிரிவில் கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), யானிக் சின்னர் (இத்தாலி), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

The post பாரிபா ஓபன் டென்னிஸ் காலிறுயில் ஸ்வியாடெக் appeared first on Dinakaran.

Tags : Sviatek ,Paribas Open ,quarterfinals ,Indian Wells ,Ika Sviatek ,United States ,Kazakhstan ,Yulia Putintseva ,Bariba Open tennis quarterfinals ,Dinakaran ,
× RELATED சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஸ்வியாடெக்