- ஆடமுக-பாஜா
- கோவா
- கே
- ஸ்டாலின்
- Pollachchi
- கோவாய்
- அத்தமுகா
- -பாஜா
- கே. ஸ்டாலின்
- பொள்ளாச்சி ஆச்சிபட்டி, கோவை மாவட்டம்
- பாஜா
பொள்ளாச்சி: மாநிலத்தை கெடுத்த, மாநிலத்தை கண்டு கொள்ளாத அதிமுக-பாஜ இடையே கள்ளக்கூட்டணி உள்ளதாக கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் தமிழக அரசுத்துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வரவேற்றார். விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், வனத்துறை, ஆனைமலை புலிகள் காப்பகம், பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, எரிசக்தி துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, காவல்துறை, தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆவின் உள்ளிட்ட துறைகள் சார்பில் ரூ.416.69 கோடி மதிப்புள்ள பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை, கூட்டுறவு துறை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் ரூ.509.95 கோடி மதிப்பில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை துவக்கிவைத்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், நகராட்சி நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.346.87 கோடி மதிப்பில் 57,325 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
சிந்தித்து, சிந்தித்து மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்கியதால்தான் தமிழ்நாட்டின் தொழில்வளம் உயர்கிறது. வேலைவாய்ப்பு பெருகுகிறது. பொருளாதாரம் வளர்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறுகிறது. அதைப்பார்த்து சிலர் பொறாமைப்பட்டு, தமிழ்நாட்டு மக்களையும், தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துகின்ற வகையில், பொய்களையும், அவதூறுகளையும் பரப்ப “வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி” நடத்துகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தக்க பாடம் புகட்டுகிற நேரம் வந்துவிட்டது. நம் மண்ணை, நம் தமிழை, நம் பண்பாட்டை, நம் வரலாற்றை, நம் பெருமையை பழிப்பவர்களுக்கு பதில் சொல்கின்ற காலம் வந்துவிட்டது. அதன் அடையாளம்தான், இங்கே நீங்கள் திரண்டு வந்திருக்கின்ற காட்சி.
அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் ஆட்சியாக கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது. 10 காலம் அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடந்தது. திமுக ஆட்சியில் மேற்கு மண்டலத்துக்கு கொண்டு வந்த திட்டங்களை நான் இப்போது பட்டியலிட்டதுபோல் அவர்களால் பட்டிய லிட்டு சொல்ல முடியு மா? மேற்கு மண்டலத்தை தங்களுடைய கோட்டை என்று சொல்லிக்கொண் டார்களே. வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்த தா? இத்தனைக்கும் மேற்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் அதிமுக ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தார்கள். அவர்கள் இந்த மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன? மகள்களை பெற்ற அத்தனை பெற்றோரையும் பதற வைத்தது பொள் ளாச்சி சம்பவம். மறந்திட முடியுமா? பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்தவர்கள் தைரிய மாக அதிமுக ஆட்சியில் வலம் வந்தார்கள். புகார் கொடுத்தவர்களை மிரட்டி னார்கள். திமுக மகளிரணி சார்பில்தான். போராட் டம் நடத்தினார்கள். பிறகு, நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு நாடகம் போட் டார்கள். ஆனால், சாட் சிகள் மிரட்டப்படுகின்ற வேடிக்கையை பார்த்தார்
பத்திரிக்கையாளர் கள் இதுபற்றி அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்ட போது, “அப்படி எதுவும் இல்லை. ஆதாரம் இருந் தால் கொடுங்கள்” என்று சொன்னார். நான் அப் போது தேர்தல் பிரச்சாரத் திற்கு வந்தபோது சொன் னேன், இதை நான் சும்மா விடமாட்டேன். நிச்சய மாக, இதற்குரிய நடவ டிக்கையை இந்த ஸ்டா லின் உறுதியாக எடுப்பான் -என்று அப்போதே நான் உறுதி தந்திருக்கிறேன். அதை, இன்றைக்கும் மறந் துவிடவில்லை. பாதிக்கப் பட்ட பெண்ணின் அடை யாளம் தெரியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கும் நிலையில், அந்த பெண்ணு டைய பெயரையும், முகவரியையும் வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சிதான் எடப்பாடி பழ னிசாமியின் ஆட்சி. அந்த வழக்கு, சிபிஐ விசாரணை யில், இப்போது நீதிமன்றத் தில் இருக்கிறது. அதுமட்டுமா?
முதலமைச்சராக இருந்த அம் மையார் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில், கொலை, கொள்ளை, தற் கொலை சம்பவம் நடந் தது இல்லையா? அமைதி வழியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக் குதல் நடத்தியது யாரு டைய ஆட்சியில்? பெண் போலீஸ் எஸ்.பி.க்கேபாது பாப்பு இல்லாத வகையில் ஆட்சி நடத்தியது யார்? தூத்துக்குடியில் 11 பேர் துப் பாக்கியால் சுட்டுக்கொன் றது யாருடைய ஆட்சியில்? கஞ்சா, குட்கா, மாமுல் பட்டியலில் அமைச்சரும், டிஜிபியும் இருந்தார்களே? அது யாருடைய ஆட்சி யில்? அந்த வழக்கில் குற் றப்பத்திரிகைகூட தாக்கல் செய்ய விடாமல் தடுத்த வர்கள்தான் இன்றைக்கு உத்தமர் வேஷம் போடுகி றார்கள்.
இந்த கூட்டணி மறுபடியும் மக்களை ஏமாற்ற பிரிந்தமாதிரி நடித்துக் கொண்டு இருக்கிறார் கள். நாடகம் நடக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்கும், தமிழர்கள் நலனுக்கும் எராக அதிமுக-பாஜ கள் ளக்கூட்டணி ஒரு பக்கம். இன்னொரு பக்கம், தமிழர் உரிமையை பாதுகாக்க, ஜனநாயக சக்திகளும், திமுகவும் ஒற்றுமையாக நிற் கிறோம். ஒன்றிய அரசு ஒத் துழைப்பு இல்லாதபோதே இத்தனை சாதனைகளை, திட்டங்களை நம்மால் கொடுக்க முடிகிறது என் றால், நமக்கு உதவி செய் கிற ஒன்றிய அரசு அங்கு அமைந்தால் இன்னும் பத்து மடங்கு சாதனை களை இந்த திமுக செய்யும். வருகிறது. அதிமுக, மாநிலத்தை கண் அதற்கான நேரம் நெருங்கி மாநிலத்தை கெடுத்த டுகொள்ளாத பாஜ, இந்த கள்ளக்கூட்டணியை மக் கள் அடையாளம் கண்டு கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நலனே முக்கியம் என செயல்படும் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு, தமிழ்நாட்டு மக்கள் துணை இருப்பதுபோல் உண்மை யான வளர்ச்சியை நமது நாடு காண, ஒட்டுமொத்த இந்திய மக்களும் தயாராகி விட்டார்கள். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக் கிறேன். தமிழ்நாட்டை உயர்த்துவோம். இந்தி யாவை காப்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்
The post மாநிலத்தை கெடுத்த, மாநிலத்தை கண்டுகொள்ளாத அதிமுக-பாஜ இடையே கள்ளக்கூட்டணி: கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.