துபாய்: தனது 100வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் பட்டியலில் சக வீரரான பும்புராவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார். இதே போல் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் கேப்டன் ரோஹித் ஷர்மா 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இந்திய அணி மற்றும் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அடுத்து நடைபெற்ற 4 போட்டிகளிலும் இந்திய ஆதிக்கம் செலுத்தி இங்கிலாந்து அணியை துவம்சம் செய்தது.
சமீப காலமாக இங்கிலாந்து அணி பின்பற்றி வரும் ‘பேஸ்பால்’ கிரிக்கெட் முறையை அவர்களுக்கே இந்திய அணி திருப்பி கொடுத்தது. இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கில், ரோஹித் சர்பராஸ் கான், ஜுரேல் ஆகியோர் பேட்டிங்கில் அதிரடியை காட்டினார். பந்துவீச்சை பொறுத்தவரை ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப், ஜடேஜா ஆகியோர் கலக்கினர்.
இந்த தொடர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மிகவும் சிறப்பான தொடராக அமைந்தது. அவரின் 500வது டெஸ்ட் விக்கெட் வீழ்த்தினார் மற்றும் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பெருமையை பெற்றார். இத்தொடரில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி மொத்தம் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.
அஸ்வின் 870 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 847 புள்ளிகளுடன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜோஷ் ஹேஸ்ல்வுட் ஆகியோர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 788 புள்ளிகளுடன் ஜடேஜா ஏழாவது இடத்தில் உள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் கேப்டன் ரோஹித் ஷர்மா 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 740 புள்ளிகளுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எட்டாவது இடத்திலும், 737 புள்ளிகளுடன் கிங் கோலி 9வது இடத்திலும் உள்ளனர்.
The post ஐசிசி நம்பர் 1 டெஸ்ட் பவுலரானார் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின்!! appeared first on Dinakaran.