×

ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்; அரசுப் பணியில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!!

டெல்லி: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தால், ஏழை குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்களுக்கும் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாக்குறுதி அளித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே, காங்கிரஸ் வாக்குறுதியில் காலியாக உள்ள 30 லட்சம் வேலை வாய்ப்புகள் நிரப்பப்படும், அரசுப் பணிக்கான தேர்வுத் தாள் கசிவதை தடுக்க சட்டம், தொழிற்பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை போன்ற இளைஞர்களை கவரும் அறிவிப்புகளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார். இந்நிலையில், பெண்களுக்கு 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கான 5 வாக்குறுதிகள்:

*ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்.

*ஒன்றிய அரசின் கீழுள்ள அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு திட்ட பணியாளர்களுக்கான மாத ஊதியம் இரட்டிப்பாகும்.

*ஒன்றிய அரசுப் பணிகளில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

*நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேலைக்கு செல்லும் பெண்களுக்காக மாவட்டத்துக்கு ஒரு சாவித்ரி பாய் புலே விடுதி அமைக்கப்படும்.

*ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். என பெண்களை கவரும் விதமாக காங்கிரஸ் வாக்குறுதிகளை அளித்துள்ளது.

 

 

The post ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்; அரசுப் பணியில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Delhi ,People's Elections ,Akkad ,Mallikarjuna Kargay ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...