×

திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 4 ஆயிரம் ஊழியர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள்

*அறங்காவலர் குழு தலைவர் வழங்கினார்

திருமலை : திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 4 ஆயிரம் ஊழியர்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை அறங்காவலர் குழு தலைவர் வழங்கினார். திருப்பதி மகதி அரங்கில் தேவஸ்தான பணியாளர்களுக்கான மூன்றாம் தவணை வீட்டுப் பட்டா வழங்கும் விழா நேற்று நடந்தது. திருப்பதி எம்.எல்.ஏவும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர், செயல் அதிகாதி ஏ.வி.தர்மா ஆகியோர் இணைந்து 4000 ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினர்.

அப்போது அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் பேசியதாவது: 16 ஆண்டுகளுக்கு முன் அறங்காவலர் குழு தலைவராக இருந்தபோது, அப்போதைய முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் உத்தரவின் பேரில் தேவஸ்தான ஊழியர்களுக்கு வீட்டு மனை வழங்க முயற்சி செய்தேன். தனது பதவிக் காலத்துக்குப் பிறகு வந்த இடையூறுகளால் ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வது நிறுத்தப்பட்டது. வடமாலைப்பேட்டை மற்றும் பாதிரேடு பகுதியில் இரண்டு கட்டமாக 432 ஏக்கரில் 5,221 பணியாளர்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஏர்பேடு மண்டலம் பள்ளத்தில் ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் என 4000 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகனின் ஒரு பொறுப்பான அரசாங்கம். ஊழியர்களுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தவறாமல் வீட்டு மனைகள் ஒதுக்கப்படும். அதேபோல், தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து கார்ப்ரேஷன், ஒப்பந்தம், அவுட்சோர்சிங், எப்எம்எஸ் தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் போன்றோருக்கு ஊதியம் ₹5 ஆயிரத்தில் இருந்து ₹20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து செயல் அதிகாரி தர்மா பேசியதாவது: வடமலப்பேட்டை மற்றும் பள்ளம் பகுதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகள் குறித்து சில நாளிதழ்கள் மற்றும் சிலர் பரப்பும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். வடமலைப்பேட்டையில் மொத்தம் 432 ஏக்கரில் 5,221 பணியாளர்களுக்கு வீடுகள் லேஅவுட் மற்றும் மனை எண்கள் இரண்டு தவணைகளில் கொடுக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது பதிவுகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலத்தை வாங்குவதற்கும், லேஅவுட் மேம்பாட்டிற்கும் ரூ.150 கோடி தேவஸ்தானம் செலவிடப்பட்டுள்ளது. இதேபோல், ஏர்பேடு மண்டலம் பள்ளம் கிராமத்தில் 400 ஏக்கரை அரசிடம் இருந்து ரூ.90 கோடி செலவழித்து கொள்முதல் செய்துள்ளது, 320 ஏக்கர் ஏற்கனவே மாவட்ட அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஊழியர்களுக்கு வீட்டு மனைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடனடியாக மனை எண்களை இணைத்து குலுக்கல் மூலம் விட்டுமனை ஒதுக்கீடு செய்து ஊழியர்களுக்கு வழங்கப்படும். 723 பணியாளர்கள், 3277 ஓய்வூதியர்கள் என 4,000 பேருக்கு வீட்டு மனைகள் ஒதுக்கப்படுகின்றன. 2015ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த 800 நிரந்தர ஊழியர்களும், 1,780 ஓய்வூதியர்களும் இன்னும் எஞ்சியுள்ளனர்.

பள்ளத்தில் தற்போது 100 ஏக்கர் உபரியாக உள்ளது, மேலும் 200 ஏக்கர் அரசிடம் இருந்து கொள்முதல் செய்து, மீதமுள்ள 2,580 ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்படும். ஊழியர்களின் வீட்டு மனைகளுக்காக இதுவரை சுமார் ரூ.240 கோடி செலவிட்டுள்ளது. ஊழியர்கள் இதுவரை ரூ.85 கோடியை தேவஸ்தானத்திற்கு திருப்பிச் செலுத்தியுள்ளனர், மீதமுள்ள ஊழியர்கள் அனைவரும் பணத்தை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் இணை செயல் அதிகாரி வீரபிரம்மம், துணை செயல் அதிகாரி சினேகலதா, பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் பங்கேற்றனர்.

432 ஏக்கரில் 5,221 பணியாளர்களுக்கு வீடுகள்

வடமலைப்பேட்டையில் மொத்தம் 432 ஏக்கரில் 5,221 பணியாளர்களுக்கு வீடுகள் லேஅவுட் மற்றும் மனை எண்கள் இரண்டு தவணைகளில் கொடுக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது பதிவுகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலத்தை வாங்குவதற்கும், லேஅவுட் மேம்பாட்டிற்கும் ரூ.150 கோடி தேவஸ்தானம் செலவிடப்பட்டுள்ளது என்று செயல் அதிகாரி தர்மா தெரிவித்தார்.

The post திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 4 ஆயிரம் ஊழியர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் appeared first on Dinakaran.

Tags : Housing Patas ,Tirupathi Devasthana ,Board ,of Trustees ,Thirupathi Magati Arena ,Tirupathi Devastana ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் தலைமை செயலாளர் ஆலோசனை