×

தோகைமலை அருகே வருந்திப்பட்டியில் வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் கலந்துரையாடல்

தோகைமலை : தோகைமலையில் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.தோகைமலை வட்டார வேளாண்மைத்துறை சார்பில் விவசாய வயல்களுக்கு நேரடியாக சென்று வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தோகைமலை ஊராட்சி வருந்திப்பட்டியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பேராசியர் முத்துச்சாமி, தோகைமலை வேளாண்மை உதவி இயக்குநர் மதன்குமார், உதவி வேளாண்மை அலுவலர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளிடம் கலந்துரையாடல் செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். முன்னதாக வேளாண்மை அலுவலர் அர்ச்சுணன் வரவேற்று பேசினார்.இதில் தோகைமலை வேளாண்மை உதவி இயக்குநர் மதன்குமார் பேசுகையில், வேளாண்மைத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு வழங்கும் திட்டங்கள், உழவன் செயலியின் பயன்பாடுகள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பேராசியர் முத்துச்சாமி கூறுகையில்: நிலக்கடலை பயிரில் பூச்சி நோய் தாக்குதல், கட்டுப்படுத்தும் முறைகள், ஒருக்கிணைந்த உர சிர்வாகம் குறித்து விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதேபோல் மண் மற்றும் நீர் பரிசோதனையில் முக்கியத்துவம், நிலத்தடி நீர் சேகரிப்பின் முக்கியத்துவம், சொட்டு நீர் பாசனத்தின் மூலம் குறைந்த நீர் செலவில் அதிகமான இலாபம் பெறுவது மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடுகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இறுதியாக உதவி வேளாண்மை அலுவலர் நடராஜன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சிவனேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் தியாக் ஆகியோர் செய்திருந்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post தோகைமலை அருகே வருந்திப்பட்டியில் வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Tags : Varuntipatti ,Tokaimalai ,Thokaimalai ,Thokaimalai District Agriculture Department ,Tokaimalai Panchayat ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு