×

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு: அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவுக்கு அதிமுக அழைப்பு

சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவுக்கு அதிமுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற 2 கட்ட பேச்சு நடத்திய தேமுதிக, கூட்டணி சுமுகமாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கிடையே கூட்டணிக்கு அணுகிய பாஜகவுக்கு தேமுதிக நேற்று முன்தினம் நேரம் ஒதுக்கியது.

பா.ஜ.க. கூட்டணியில் சேர ராஜ்யசபா இடம் வேண்டுமென தேமுதிக உறுதியாக இருந்தது. மக்களவை தேர்தலில் ஒரு இடத்திலாவது தனிச்சின்னத்தில் வெற்றி பெற தேமுதிகவுக்கு பா.ஜ.க. நிபந்தனை விதித்தது. ஒரு இடத்தில் வென்று வந்தால் அதன்பின் ராஜ்யசபா இடம் தரலாம் என பாஜக நிபந்தனை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நிபந்தனை விதித்ததால் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தேமுதிக தவிர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பாஜகவிடம் பேச்சு நடத்தவில்லை என பிரேமலதா தெரிவித்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கிவிட்டு தெரிவிப்பதாக தேமுதிக தலைமை பதிலளித்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

The post மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு: அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவுக்கு அதிமுக அழைப்பு appeared first on Dinakaran.

Tags : MLAKAWA CONSTITUENCY ,ADAMUKA ,TEMUDIGA ,Chennai ,Demusika ,Lok Sabha ,Tamil Nadu ,Dimuka ,Adimuka ,BJP ,Demudiga ,Dinakaran ,
× RELATED தருமபுரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை!