சேலம், மார்ச் 13: சேலம் குமரகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் நேற்றுமுன்தினம் அம்மாபேட்டை பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக தனது நண்பரின் டூவீலரில் வந்த பிளஸ் 2 மாணவன், பூபதி மீது மோதினார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி மாணவனுக்கு டூவீலர் கொடுத்த அவரது நண்பருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், பிளஸ் 2 படிக்கும் அவரது நண்பர் தனது உறவினரான கதிரேசன் என்பவருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் பூபதியுடன் அவர்களும் வாக்குவாதம் செய்தனர். அப்போது கதிரேசன் மற்றும் டூவீலரை கொடுத்த பிளஸ் 2 மாணவன் ஆகியோர் பூபதியை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் கதிரேசன் மற்றும் டூவீலர் கொடுத்த பிளஸ் 2 மாணவன் ஆகிய 2பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post வாலிபரை தாக்கிய மாணவன் உள்பட 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.