- பூமி பூஜை
- திருச்செங்கோடு
- எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு
- ஜனாதிபதி
- ஜெயசுதா சக்திவேல்
- பொது நிதியம்
- தர்சலா
- கவுண்டன்பாளையம் ஊராட்சி கொட்டங்காட்டு புதூர்
- தாண்டம் பாளையம் பழைய காலனி
- பூமி பூஜா
திருச்செங்கோடு, மார்ச் 13: திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயசுதா சக்திவேல் தலைமையில், ஒன்றிய பொதுநிதியில் இருந்து, 85. கவுண்டன்பாளையம் ஊராட்சி கொட்டாங்காட்டு புதூரில் இருந்து தாண்டாம் பாளையம் பழைய காலனி வரை தார்சாலை ₹15.40 லட்சம் மதிப்பீட்டிலும், தாண்டாம்பாளையம் அருந்ததியர் தெருவில் சிறு பாலத்துடன் கூடிய வடிகால் அமைக்க ₹8.15 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெறும் பணிகளுக்கு பூமி பூஜை விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி, எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஒன்றிய குழு தலைவர் ஜெயசுதா சக்திவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுகிர்தா பாலகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல், கொன்னையார் கவுன்சிலர் ஜெய்சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசலம், துணை தலைவர் யசோதா செல்வகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய பேரவை செயலாளர் புரட்சிமுத்து, ஒன்றிய மகளிர் அணி கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post சாலைப் பணிக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.