குமாரபாளையம், மார்ச் 13: குமாரபாளையத்தில் வடக்கு திமுக, தெற்கு திமுக என இரண்டாக பிரிக்கப்பட்டது. இரண்டு அலுவலகமும் ஒன்றாக இயங்கி வந்த நிலையில் தேர்தல் நெருங்குவதால், களப்பணியில் துரிதமாக செயல்படும் வகையில், தெற்கு நகரத்திற்கு என தனி அலுவலகம் திறக்கப்பட்டது. புதிய அலுவலகம் திறப்பு விழா திமுக தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் பங்கேற்று ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி வைத்தார். மாநில சொத்துபாதுகாப்பு குழு உறுப்பினர் மாணிக்கம், நகர மன்ற முன்னாள் தலைவர் ஜெகநாதன், மாவட்ட திமுக பொருளாளர் ராஜாராம், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணையமைப்பாளர்கள் கதிரவன்சேகர், முரளி, மாவட்ட அயலகஅணி அமைப்பாளர் சாதிக், தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் கருணாகரன்,மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராதிகாசக்திவேல், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சௌந்தரம், திமுக நிர்வாகிகள் இராஜேந்திரன், முன்னாள் நகர செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட சார்பு அணி துணையமைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், கயல்விழி, வினோத்குமார், வெங்கடேசன், லோகவிஜயன், அசோக் ஆனந்த், சுடலைராஜ், பரணிதரன், பொறுப்பு குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், ரவி, செல்வகுமார், தர்மராஜன், தேவிமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post நகர திமுக அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.