- விருதுநகர்
- சாந்தி
- பெண்கள் சுய உதவி குழு
- விருதுநகர் கலெக்டர் அலுவலகம்
- கிருஷ்ணமூர்த்தி
- சூலக்கரை மேடு கணபதி நகர்
- தின மலர்
விருதுநகர், மார்ச் 13:விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் கேன்டீன் நடத்தி வருபவர் சாந்தி. இவர் தனது கணவர் கிருஷ்ண மூர்த்தி உடன் டூவீலரில் நேற்று முன்தினம் மாலை சூலக்கரை மேடு கணபதி நகரில் உள்ள வீட்டிற்கு சென்றார். தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் சாத்தூரில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த கார் தடுப்பு சுவரில் ஏறி இரும்பு கம்பி வேலியை உடைத்து மறுமார்க்கமாக சர்வீஸ் ரோட்டில் கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்த பைக்கில் மோதியது.
இதில் கிருஷ்ணமூர்த்தி(49), சாந்தி(41), காரில் பயணம் செய்த மலேசியாவை சேர்ந்த சரஸ்வதி(48), தனலட்சுமி(56), விக்னேஷ்வரி(46) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் 5 பேரும் சிகிச்சையில் உள்ளனர். சூலக்கரை போலீசில் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரில் கார் டிரைவர் கோவை உழியம்பாளையத்தை சேர்ந்த பவித்திரன்(29) மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
The post தடுப்புகளை உடைத்து ஒன்வேயில் பாய்ந்து சென்ற கார் மோதி 5 பேர் காயம் appeared first on Dinakaran.