×

கோடை கால தீ விபத்து குறித்து விழிப்புணர்வு

 

திருப்பூர், மார்ச் 13: திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் பொதுமக்களுக்கு கோடை காலத்தில் ஏற்படக்கூடிய தீ விபத்துகள் குறித்தும், அதனை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், கோடை காலத்தில் முறையாக மின்சார சுவிட்களை அணைத்து வைக்க வேண்டும். மேலும், குளிர்சாதன பெட்டியின் மீது துணிகளை போட்டு வைப்பதும், அதன் மீது பொருட்களை வைப்பது போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் சிலிண்டரில் இருந்து தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக துணியை தண்ணீரில் நனைத்து காற்று புகாதபடி சிலிண்டர் மீது போட்டால் அந்த தீ உடனடியாக அணைந்து விடும். அப்படி போடுவதை தவிர்த்து நாம் வெளியே வரும் பட்சத்தில் வீடு முழுக்க தீப்பற்றி அந்த அழுத்தத்தினால் சிலிண்டர் வெடிக்க வாய்ப்புள்ளது.

அதேபோல் வீடுகளில் ஏ.சியின் கீழ் துணி, மரப்பொருட்கள் போன்றவற்றை வைக்கக்கூடாது. தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்கள் அருகாமையில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

The post கோடை கால தீ விபத்து குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Awareness ,Tirupur ,Northern Fire Station Officer ,Veeraraj ,Chamundipuram ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...