×

பழக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

 

ஊட்டி, மார்ச் 13: ஊட்டியில் ரசாயனம் பயன்படுத்தி வாழைப்பழம் பழுக்க வைக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பழக்கடைகளில் ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கடைகளில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது.

இதனை தொடர்ந்து ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படும் பழக்கடைகள் மட்டுமின்றி பழங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன்களிலும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘‘செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்ணும் போது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற உடல் உபாதைகளால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே பழ வியாபாரிகள் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பதை தவிர்க்க ேவண்டும். மீறி விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தரங்கள் நிர்ணய சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

The post பழக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty, Nilgiris ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...