×

பணம் வசூலித்த போலி விற்பனை வரி அதிகாரி கைது

 

மதுரை, மார்ச் 13: மதுரை வண்டியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யூசுப் (45). இவர் மஸ்தான்பட்டியில் உள்ள தனியார் தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். இவரது நிறுவனத்திற்கு கடந்த மாதம் சென்ற மர்மநபர் ஒருவர் தன்னை விற்பனை வரித்துறை அதிகாரி எனக்கூறி, ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் அதே நபர் பணம் வாங்க சென்ற போது சந்தேகமடைந்த யூசுப் அவரின் அடையாள அட்டையை வாங்கி பார்த்துள்ளார்.

தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது முன்பு விற்பனை வரித்துறையில் வேலை பார்த்ததாகவும், தற்போது அங்கு பணிபுரியவில்லை என கூறியுள்ளார். இதையடுத்து யூசுப், அவரை பிடித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் ஆணையூர், அய்யனார்புரத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பணம் வசூலித்த போலி விற்பனை வரி அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Yusuf ,Vandiyur Kaliamman Kovil Street, Madurai ,Mastanpatti ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை