- திருப்பூர் கந்தசுவாமி கோயில்
- Tiruporur
- தியாகராஜன்
- காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவில்
- திருப்பூருர்
- கந்தசுவாமி கோயில்
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோயில் காணிக்கை உண்டியல்கள் ஒரு ஆண்டுக்கு நான்கு முறை எண்ணப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் ஏராளமான பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் குமரகோட்டம் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், திருப்போரூர் கந்தசாமி கோயில் செயல் அலுவலர் குமரவேல், ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் மொத்தம் 12 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், 65 லட்சத்து 49 ஆயிரத்து 531 ரூபாய், 229 கிராம் தங்கம், 7050 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
The post திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.65 லட்சம் appeared first on Dinakaran.