×

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி தம்பிக்கு பட்டா கேட்டு முதுகில் சுமந்து வந்து மனு கொடுத்த அக்கா: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நெகிழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி தம்பிக்கு பட்டா கேட்டு முதுகில் சுமந்து வந்து, அவரது அக்கா மனு வழங்கினார். இச்சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், பெருநகர் ரோட்டு தெருவை சேர்ந்தவர் வேல்விழி, மாற்றுத்திறனாளி சகோதரர் குமார். இவர்களுடைய சகோதரர்கள், இவர்களை கைவிட்ட காரணத்தினால் நத்தம் புறம்போக்கில் ஒரு குடிசை வீட்டில் இருவரும் வசித்து வருகின்றனர். வேல்விழி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருவதால், காலையில் சென்றால் மாலையில் மட்டுமே வீடு திரும்பி வருவது வழக்கம்.

அப்போது, தனது மாற்றுத்திறனாளி சகோதரருக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை வைத்துவிட்டு செல்வார். இந்த குடிசை வீட்டுக்கு பட்டா கேட்டு கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் என பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தனது தம்பியை சுமந்து வந்து மனு அளித்தார்.

அப்போது, அவர் கூறுகையில், ‘மாற்றுத்திறனாளி தம்பி உடன் வாழ்ந்து வரும்நிலையில், ஆடு மேய்க்கும் தொழிலில் வந்த வருமானத்தை வைத்து நத்தம் புறம்போக்கில் ஒரு குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். தனது தம்பி குமாரை மாற்றுத்திறனாளி என்பதை அறிந்தும், ஒன்றை ஆண்டு காலமாக பட்டா வழங்காமல், அலைகழித்து வருகின்றனர். எனது சகோதரர் மாற்றுத்திறனாளி என்பதை மனதில் கொண்டு, எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்’ என்றார். இன்றைய காலகட்டத்தில் முதுகில் குத்தும் உறவினர்களுக்கு மத்தியில், தனது தம்பியை முதுகில் சுமந்து வந்த அக்காவின் செயல் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி தம்பிக்கு பட்டா கேட்டு முதுகில் சுமந்து வந்து மனு கொடுத்த அக்கா: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Grievance Meeting ,Leschi ,Kanchipuram Collector ,Kanchipuram ,Kanchipuram District ,Uttaramerur Circle ,Metropolis Road Street ,Velvivihi ,Leschichi ,Collector ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...