×

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. அதில், எம்பி, எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர். நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு குளக்கரை தெருவில் உள்ள பழமை வாய்ந்த பெரிய குளத்தை சீரமைத்து தரும்படி அப்பகுதி பொதுமக்கள் நகர மன்ற தலைவர் மற்றும் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.62 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு குளம் சீரமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.

இதில், நகர மன்ற தலைவர் கார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார். துணை தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டு குளத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இதேபோல், 18வது வார்டுக்கு உட்பட்ட நந்திவரம் காலனி பகுதியில் அப்பகுதி வார்டு திமுக செயலாளர் கார்த்திக் ஏற்பாட்டின் பேரில் காஞ்சிபுரம் தொகுதி எம்பி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை, மேலும் நாராயணபுரம் பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை போடும் விழா நேற்று நடைபெற்றது.

இதில், நகர மன்ற தலைவர் கார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார். துணை தலைவர் லோகநாதன் முன்னிலை வகித்தார். அப்பகுதி வார்டு கவுன்சிலர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தனர். பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் வார்டு கவுன்சிலர்கள் சதீஷ்குமார், ஸ்ரீமதிராஜி, ரவி, திவ்யாசந்தோஷ்குமார், கௌசல்யாபிரகாஷ், சசிகலாசெந்தில், கண்ணன், ஜெயந்திஜெமினிஜெகன், நகராட்சி கமிஷனர் தாமோதரன், பொறியாளர் வெங்கடேசன் உட்பட ஏராளமான கலந்துகொண்டனர்.

The post நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Bhumi Pooja ,Nandivaram-Kudovanchery Municipality ,MLA ,Kuduvanchery ,Bhoomi Puja ,Nandivaram-Kooduvanchery Municipality ,Bhoomi Pooja ,Nandivaram- ,Kudovanchery ,Municipality ,Dinakaran ,
× RELATED இளையான்குடி பேரூராட்சியில் தூய்மைப்...