×

கர்நாடகத்தில் தடை எதிரொலி கோபி மஞ்சூரியன் உணவில் ரோடோமைன்- பி ரசாயனமா? ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கோபி மஞ்சூரியன் போன்ற உணவு வகைகளில் ரோடோமைன் -பி ரசாயனம் பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படுகிறதா என்று ஆய்வுமேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. அண்மையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரோடமைன்-பி என்ற வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது கர்நாடகாவிலும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடமைன்-பி ரசாயனம் கலந்த உணவு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாய் உடன் கோபி மஞ்சூரியனும் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கோபி மஞ்சூரியன், சிக்கன் 65, தந்தூரி மற்றும் இனிப்பு வகைகளில் ரோடோமைன் -பி ரசாயனம் கலந்து நிறமூட்டிகள் பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களில் ரசாயனம் கலந்து நிறமூட்டிகள் பயன்படுத்தியது தெரியவந்தால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புற்றுநோய் உண்டாக்கும் ரோடோமைன் -பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் கர்நாடகத்தில் தடை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங் களிலும் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும், தமிழகத்தில் தடையை மீறி உணவுப்பொருட்களில் நிறமூட்டி கலக்கப்படுகிறதா என ஆய்வு செய்யவும் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

The post கர்நாடகத்தில் தடை எதிரொலி கோபி மஞ்சூரியன் உணவில் ரோடோமைன்- பி ரசாயனமா? ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Food Safety Department ,CHENNAI ,Gobi ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள்...