×

ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

சென்னை: கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவன் வலியில் துடி துடித்த வீடியோ வெளியாகி அதிர்வலையை கிளப்பிய நிலையில் ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, அந்த liquid nitrogen மூலம், தயாரிக்கப்படும் smoke biscuit-கள் உயிருக்கு ஆபத்தானவை எனவும், அதை உட்கொள்ள வேண்டாம் எனவும் பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுக்கு, பொழுதுபோக்கு இடங்களில், smoking biscuit-ஐ வாங்கிக் கொடுக்க வேண்டாம் எனவும், அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சென்னையில, இந்த smoking biscuit தயார் செய்யும் இடங்கள், ஆய்வு செய்து, இதன் பாதிப்பை எடுத்துக் கூறி, சுற்றறிக்கை கொடுக்கவும், முடிவு செய்யப்பட்டிருக்கிறது. திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப்பொருட்களை விற்கக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு அளித்துள்ளது.

சென்னையில் திரவ நைட்ரஜன் உணவு பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு அளித்துள்ளனர். liquid nitrogen தேவைப்படும் இடத்தில் மட்டுமே, பயன்படுத்த வேண்டும் எனவும், இந்த உத்தரவை மீறி பயன்படுத்தினால் உணவு பாதுகாப்பு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவின் தாவணக்கரை பகுதியில் அண்மையில் பொருட்காட்சியின் போது சிறுவன் ஒருவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை பருகி இருக்கிறார். அதனை சாப்பிட்டதும் மூச்சு விடமுடியாமல் வயிற்றுவலியால் துடித்த சிறுவனை பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றினர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் திரவ நைட்ரஜனை புகை வடிவில் உட்கொள்வது எந்த வயதினருக்கும் ஆபத்து தான் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆய்வு கூடங்களில் பொருட்களை குளிர்ச்சியான சூழலில் பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் இந்த திரவ நைட்ரஜன் அரை வெப்ப நிலையில் வாயுவாக மாறும் தன்மை கொண்டது. இவற்றை கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஸ்மோக்கிங் பிஸ்கட், ஸ்மோக்கிங் பீடா போன்ற பெயர்களில் சாப்பிடும் பொருட்களாக விற்பனை செய்கின்றனர். liquid nitrogen தேவைப்படும் இடத்தில் மட்டுமே, பயன்படுத்த வேண்டும் எனவும், இந்த உத்தரவை மீறி பயன்படுத்தினால் உணவு பாதுகாப்பு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Food Safety Department ,Karnataka ,Dinakaran ,
× RELATED குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த...