×

காஞ்சிபுரத்தில் இளம்பெண் மாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகள் ஜெயலட்சும் (22). இவர், காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவரின் தாயார் அலமேலுக்கு உடல்நிலை சரியில்லாததால் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் ஜெயலட்சுமி மற்றும் அவரின் தாய் அலமேலு இருவரும் வீட்டுக்கு திரும்ப காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்துள்ளனர். அங்கு பேருந்தில் தாயை அமர வைத்துவிட்டு, நொறுக்கு தீனி வாங்கி வருவதாக சென்றவர் திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த தாய் அலுமேலு, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான ஜெயலட்சுமியை தேடி வருகின்றனர்.

The post காஞ்சிபுரத்தில் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Kanchipuram ,Perumal ,Jayalaksh ,Kalakatur ,Alamel ,
× RELATED தப்புமா மேயர் பதவி?.. நெல்லை, கோவையை...