×

காங். ஆட்சிக்கு வந்தால் பழங்குடியினரின் கோரிக்கைகளுக்கு ஒரு ஆண்டில் தீர்வு: ராகுல் உறுதி

நந்துர்பர்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நீதி யாத்திரை குஜராத்தில் இருந்து நேற்று மகாராஷ்டிராவில் நுழைந்தது. வருகிற 17ம் தேதி இங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றுகிறார். பல்வேறு பகுதிகளின் வழியாக ராகுலின் இந்திய நீதி யாத்திரை நடைபெற்றது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் நந்துர்பர் மாவட்டத்தில் யாத்திரையின்போது பேசிய ராகுல் காந்தி,‘‘இந்திய மக்கள் தொகையில் 8 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர். வளர்ச்சியில் அவர்களுக்கான விகிதாசார பங்கு கிடைப்பதை காங்கிரஸ் உறுதி செய்யும். 50 சதவீதத்துக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் தொகை கொண்ட கிராமங்களை காங்கிரஸ் அரசு ஆறாவது அட்டவணையில்(அரசியலமைப்பு சட்டம்) சேர்க்கும். இதன் காரணமாக உள்ளூர் அளவிலான முடிவுகளை பழங்குடியினரின் அனுமதியின்றி செயல்படுத்த முடியாது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார மற்றும் நிதி கணக்கெடுப்பு நடத்தப்படும்.இது ஒரு புரட்சி நடவடிக்கையாக இருக்கும். விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவதற்கான சட்டம் அறிமுகப்படுத்தப்படும். வன உரிமை சட்டம் அல்லது நில கையகப்படுத்தும் சட்டங்களை பாஜ பலவீனப்படுத்தியது. நாங்கள் அவற்றை வலுப்படுத்துவது மட்டுமின்றி பழங்குடியினரின் கோரிக்கைகளுக்கு ஒரு ஆண்டுக்குள் தீர்வு காண்பதை உறுதி செய்வோம்” என்றார்.

 

The post காங். ஆட்சிக்கு வந்தால் பழங்குடியினரின் கோரிக்கைகளுக்கு ஒரு ஆண்டில் தீர்வு: ராகுல் உறுதி appeared first on Dinakaran.

Tags : Kong ,Rahul ,Nandurbar ,Former ,Congress ,President ,Rahul Gandhi ,Justice Yatra ,Maharashtra ,Gujarat ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை...