×

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான 43 பெயர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டெல்லி: மக்களவை தேர்தலுக்காக 43 பெயர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது.

பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்காக 43 பெயர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அசாம், ராஜஸ்தான், குஜராத், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். முதற்கட்டமாக 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஏற்கனவே வெளியிட்டிருந்தது காங்கிரஸ் கட்சி. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

The post வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான 43 பெயர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Congress Party ,Delhi ,Lok Sabha ,Union BJP government ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு...