×

பாகிஸ்தானில் இருந்து குஜராத்துக்கு கடல்வழியாக கடத்திவரபட்ட ரூ.480 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

காந்திநகர்: குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. போர்பந்தர் துறைமுகம் அருகே படகில் வந்த 6 பாகிஸ்தானியரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

பாகிஸ்தானிலிருந்து தரைவழி, கடல்வழி, வான்வழியாக இந்திய எல்லைக்குள் போதை பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடல்வழியாக இதுபோன்ற கடத்தல்களை தடுப்பதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், குஜராத் எல்லையில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடற்படை, போதை பொருள் தடுப்புப் பிரிவு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சோதனையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றினர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை கைது செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத்தில் பிப்28-ம் தேதி படகு ஒன்றில் இருந்து ரூ.2,000 கோடி மதிப்புள்ள 3,300 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டது. கடந்த 30 நாட்களில் குஜராத்தில் 2-வது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு, கடலோர காவல்படை சோதனையில் ரூ.3,135 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post பாகிஸ்தானில் இருந்து குஜராத்துக்கு கடல்வழியாக கடத்திவரபட்ட ரூ.480 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Gujarat ,Gandhinagar ,Porbandar ,Anti-Narcotics Unit ,Pakistanis ,India ,Dinakaran ,
× RELATED அவரும் ஒரு சாதாரண பாஜ ஊழியர்தான்…...