×

13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. 5 பேருக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 5 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது உயர் அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பணியிட மாறுதலுக்கு உட்படுத்தப்படுவாரக்ள். அதேபோல் பதவி உயர்வும் வழங்கப்படும். இந்த நிலையில், இன்று 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம் வருமாறு:-

*வண்டலூர் ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சிக் கல்லூரி கூடுதல் இயக்குநராக பி.சி.தேன்மொழி நியமனம்.

*சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக வி.அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

*மதுரை துணை ஆணையர் பி.பாலாஜி, காவலர் நலத்துறை ஏ.ஐ.ஜி.யாக நியமனம்.

*சென்னையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராக எஸ்.வனிதா நியமனம்.

*சென்னையில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக டி.ரமேஷ் பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

*சென்னையில் காவல்துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக கே.ஆதிவீரபாண்டியன் நியமனம்

*சென்னை பெருநகர காவல்துறை துணை ஆணையராக எஸ்.எஸ்.மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

*கோவை நகர போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையராக ரோஹித் நாதன் ராஜகோபால் நியமனம்.

*காரைக்குடி எஸ்.பி. ஸ்டாலினுக்கு கோவை நகர வடக்கு பிரிவு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு

*உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுகுமாரிக்கு, மதுரை நகர சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு.

*அரக்கோணம் ஏ.எஸ்.பி. யாதவ் கிரிஷ்க்கு, திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு.

*திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக விவேகானந்தா சுக்லாவுக்கு பதவி உயர்வு.

*மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக கரட் கரூனுக்கு பதவி உயர்வு.

The post 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. 5 பேருக்கு பதவி உயர்வு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...