×

உடுமலையில் பூட்டி கிடக்கும் ஆதார் மையம்

*பொதுமக்கள் பாதிப்பு

உடுமலை : உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆதார் மையம் உள்ளது. இங்கு புதிதாக ஆதார் பதிவு செய்யவும், பல்வேறு திருத்தங்களை செய்யவும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர்.குறிப்பாக, கிராமப்புறங்களில் இருந்து அதிகளவு மக்கள் வருகின்றனர். ஆனால், ஆதார் மையம் சரியான நேரத்தில் இயங்குவதில்லை. மக்கள் காலை 8 மணிக்கே வந்துவிடுகின்றனர். ஆனால், 10 மணி ஆனாலும் ஆதார் மையம் திறக்கப்படவில்லை. இரு ஊழியர்களும் சாவகாசமாக வருவதாக புகார் உள்ளது.

இதனால், பொதுமக்கள் வெயிலில் காத்திருக்கின்றனர். ஒரு நாளைக்கு 15 பேருக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும் என்கின்றனர். இதனால் காத்திருந்த மக்கள் மேலும் வேதனை அடைகின்றனர். ஊழியர்களிடம் கேட்டால், சர்வர் பிரச்னை காரணமாக தினமும் 15 பேருக்குதான் முடியும் என்கின்றனர்.ஆதார் மையம் செயல்படும் நேரத்தை அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கவும், ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வருவதற்கும், சர்வர் பிரச்சினையை சரி செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆதார் எடுக்க வரும் மக்கள் அவதிப்படுவது தொடர்கிறது.கச்சேரி வீதியில் உள்ள தபால் நிலையத்திலும் ஆதார் பதிவு செய்யப்படுகிறது. அங்கு முறையாக டோக்கன் வழங்கி விரைவாக சேவை செய்யப்படுவதாக கூறுகின்றனர்.

The post உடுமலையில் பூட்டி கிடக்கும் ஆதார் மையம் appeared first on Dinakaran.

Tags : Aadhaar ,Udumalai ,Aadhaar Center ,Municipal Office Complex ,Dinakaran ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு