×

பிரதமர் அருணாச்சலபிரதேசம் சென்றது குறித்த சீன தரப்பு கருத்துகளை மறுக்கிறோம்: வெளியுறவுத்துறை கண்டனம்

டெல்லி: பிரதமர் அருணாச்சலபிரதேசம் சென்றது குறித்த சீன தரப்பு கருத்துகளை மறுக்கிறோம் என்று வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டின் மற்ற மாநிலங்களை பார்வையிடுவது போலவே பிரதமரின் அருணாச்சலபிரதேச வருகையும் இருந்தது. பிரதமரின் பயணத்தால் அருணாச்சல பிரதேசத்தில் உண்மை நிலையை மாற்றமுடியாது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அருணாச்சல பிரதேசம் எப்போதும் இருக்கும். இத்தகைய வருகைகளை எதிர்ப்பது இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு சாதகமாக இருக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

The post பிரதமர் அருணாச்சலபிரதேசம் சென்றது குறித்த சீன தரப்பு கருத்துகளை மறுக்கிறோம்: வெளியுறவுத்துறை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Arunachal Pradesh ,Foreign Ministry ,Delhi ,India ,PM ,State Department ,
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...