×

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ₹1.83 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

கடலூர், மார்ச் 12: கடலூர் மாவட்டம் முஷ்ணத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் தமிழரசன் (42). இவர் ஐடிஐ எலக்ட்ரீசியன் முடித்துவிட்டு சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் வேலை பார்த்துள்ளார். வேலைக்கான ஒப்பந்தம் முடிந்து சொந்த ஊர் திரும்பி முஷ்ணத்தில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவரை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட சுரேஷ் (34) என்பவர், தனக்கு தெரிந்த ஏஜெண்ட் ஒருவர் சிங்கப்பூரில் உறுதியாக வேலை வாங்கி தருவார் என்றும், சிங்கப்பூரில் வேலை உறுதியாகிவிட்டது என்றும் அதற்கு விசாவிற்காக ரூ.2,50,000 கொடுக்க வேண்டும் என்றும், முன்பணமாக ரூ.53,000 கொடுக்க வேண்டுமென்றும், மீதமுள்ள பணத்தை, விசா பெற்றவுடன் தருமாறு கூறியுள்ளார்.

இதனை நம்பி ரூ.53,000த்தை சுரேஷின் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். மீண்டும் சுரேஷ், தமிழரசனை தொடர்பு கொண்டு, சிங்கப்பூரில் மேலும் இரண்டு வேலை உள்ளதாகவும், உங்களுக்கு தெரிந்த இரண்டு நபர்களை சேர்த்துவிடுமாறு கூறியதை நம்பி, தனது இரண்டு உறவினர்களுக்கு விசா வாங்க ஒருவருக்கு ரூ.2,50,000 என்றும், முன்பணமாக தலா ரூ.65,000 சுரேஷின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். தமிழரசனிடம் மொத்தம் ரூ.1,83,000 பெற்று கொண்டு யாருக்கும் வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து தமிழரசன் கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராமிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில், இணைய வழி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஸ்டாலின், ராஜமன்னன், பாலாஜி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ் என்பவரை கைது செய்தனர். பொதுமக்கள் யாரும் இதுபோன்ற முன்பின் தெரியாத நபர்களுடன் சமூக வலைத்தளத்தின் மூலமாக தொடர்பு கொண்டு. அவர்கள் ஏமாற்றும் வண்ணம் கூறும் எந்த ஒரு வாக்குறுதியையும் நம்பி அவர்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்று எஸ்பி ராஜாராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ₹1.83 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Viswanathan ,Tamilarasan ,Mushnam, Cuddalore district ,Singapore ,Malaysia ,Mushnam ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை