×

நகராட்சியில் தீவிர வரிவசூல்

 

திருச்செங்கோடு, மார்ச் 12: திருச்செங்கோடு நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வகையில் ஆண்டிற்கு ₹25.57 கோடி வருவாய் வரவேண்டி உள்ளது. இந்த வருவாயை கொண்டு தான் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் பல மாதங்களாக, நகராட்சிக்கு வரவேண்டிய வரியினங்கள், கட்டணங்கள், கடை வாடகைகள் ₹8 கோடி அளவுக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நிலுவை வரிகளை வசூல் செய்ய, நகராட்சி கமிஷனர் சேகர், கடந்த 5 நாட்களாக நேரடியாக களத்தில் இறங்கி உள்ளார்.

அவர் தனியார் திருமண மண்டபங்கள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வீதி வீதியாக நேரடியாக சென்று முனைப்புடன் வரிவசூல் செய்து வருகிறார். போதிய கால அவகாசம் கொடுத்தும், வரி செலுத்தாத தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றிற்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக அதிக வரி பாக்கியினை வைத்துள்ளவர்களின் பெயர்களை, பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் ஆக வைக்கப்படும் என கமிஷனர் சேகர் எச்சரித்துள்ளார்.

The post நகராட்சியில் தீவிர வரிவசூல் appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்