×

காரைக்காலில் ₹50 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணிகள்

 

காரைக்கால்,மார்ச் 12: காரைக்காலில் ரூ.50 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணிகளை நாஜிம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். காரைக்கால் மாவட்டம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட இரண்டு பகுதிகளில் 2022-23ம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாருதி நகர் கடற்கரைச் சாலைக்கு சாலை மற்றும் வடிகால் வசதி மேம்படுத்தும் பணி ரூ.20 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டிலும் மற்றும் தர்மபுரி அஸ்மா அவென்யுவிற்கு சாலை அமைக்கும் பணிக்கு ரூ.29 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டிலும் என மொத்தம் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காரைக்கால் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கலந்து கொண்டு பணிகளுக்கு பூமி பூஜை போட்டு தொடங்கி வைதார். இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ராஜாராமன், உதவி பொறியாளர் லோகநாதன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

The post காரைக்காலில் ₹50 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Nazim ,MLA ,Karaikal District South Constituency ,Maruti Nagar Beach ,Assembly Member Constituency ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...